a famous actress said she would love to be act with Vijay because her husband appearance is like vijay. photo is viral: 2001ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இந்த திரைப்படத்தின் மூலமாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
பின்னர் இதனை தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சார்லி சாப்ளின், சமுத்திரம், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் இவர் ஏசியாநெட் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினர். இதனைதொடர்ந்து 2009 ஆம் ஆண்டு கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் அஜித், விஜய், விக்ரம் போன்றோருடன் நடிக்க வேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் குறிப்பாக விஜயுடன் நான் நடிக்க வேண்டும் என்பதற்கான காரணம் என் கணவர் விஜய் போலவே இருப்பார். இதனை நான் அவரிடம் பலமுறை கூறியுள்ளேன் என்று பேட்டியில் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.