நடிகை ஒருவரின் வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த நாய் திருடு போனதை எடுத்து அது குறித்து கதறி அழுது இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வந்தது அந்த வீடியோவை பார்த்த திருடன் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக நடிகைகள் நாய்க்குட்டி வளர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மேலும் அந்த நாயை எங்கு போனாலும் அழைத்து செல்வதையும் மிகவும் செல்லமாக பார்த்துக் கொள்வதையும் செய்து வரும் நேரத்தில் திடீரென பிரபல நடிகை ஒருவரின் நாய் காணாமல் போய் உள்ளது. அதாவது பெங்களூர் சேர்ந்த நடிகை நிருஷா என்பவர் கன்னட திரைப்படங்களில் நடிப்பு பிரபலமடைந்தார் அதன் பிறகு தொலைக்காட்சி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தாராம் மேலும் வீட்டில் இருக்கும் நேரத்தில் நாயுடன் தான் இவர் அதிக நேரம் இருந்து வருவாராம் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை நிருஷா வளர்த்த நாய் காணாமல் போய்வுள்ளது. இதனை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த இவர் தனது அம்மாவுடன் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்த நாய் பல நாட்களாகியும் காணவில்லை இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான நிருஷா சாப்பிடாமலும், தூங்காமலும் இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் இவர் வருத்தமடைவதை பார்த்த இவருடைய தோழிகள் கொடுத்த அறிவுரையின்படி இன்ஸ்டாகிராமில் அந்த நாயை திருடியவர்கள் தயவு செய்து கொண்டு வந்து திரும்ப கொடுத்து விட வேண்டும் என்றும் நான் தொலைந்ததிலிருந்து என்னால் சாப்பிடவும், தூங்கவும் முடியவில்லை என்று கதறி அழுத வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் நாயை திருடிய திருடனும் அந்த வீடியோவை பார்த்ததாக தெரிகிறது அதனை அடுத்து அந்த நாயை அழைத்துக்கொண்டு வந்து திருடன் நிருஷா வீட்டு அருகே நாயை வைத்து விட்டு நிஷாவின் அம்மாவுக்கு போன் செய்து கூறியுள்ளார். எனவே நிருஷாவும் அவருடைய அம்மாவும் உடனடியாக வெளியே வந்து நாயை பார்த்தவுடன் சந்தோஷமடைந்தனர் நாயை கொண்டு வந்து வைத்த நபருக்கு நன்றி கூறி மீண்டும் வீடியோ பதிவு செய்துள்ளார்.