நடிகர் அஜித்,விஜய் போல காரின் மீது அதிகம் பிரியமுடைய பிரபல நடிகை.! தற்பொழுது பட வாய்ப்பு குறைந்ததால் கார் வாங்க முடியாமல் வருத்தத்தில் இருப்பதாக தகவல்..

ajith-vijay-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பு திறமை மட்டுமல்லாமல் அறிவியல் பூர்வமான விஷயங்களிலும் அதிக ஆர்வமுடையவர். இதன் காரணமாக இவருக்கு தற்பொழுது உள்ள இளைஞர்கள் பலர் இவரை ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித் கார் மீது அதிகம் பிரியம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நடிகர் அஜித்தை போலவே நடிகை அனுஷ்காவும் கார் மீது அதிக பிரியமுடையவராம் அந்த வகையில் அனுஷ்கா பல்வேறு வகையான சொகுசு கார்களை வைத்துள்ளாராம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் அனுஷ்கா தொடர்ந்து தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார்.பிறகு பாகுபலி திரைப்படத்தில் தேவசேனையாக நடித்து அசத்திய அனுஷ்கா அதன் பிறகு பெரிதாக திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா விலை உயர்ந்த கார் பலவற்றை வைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அந்த வகையில் பி.எம்.டபிள்யூ 6 சீரிஸ் கார் வைத்துள்ளாராம், இந்தக் காரின் விலை ₹75 லட்சம் என்றும் இந்தியாவில் 2021ஆம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டதாகவும் அறிமுகமான புதியிலேயே வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு 5 சீட்டர் எஸ்.யூ.வி கார் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அனுஷ்கா. Audi-யின் Q5 மாடலான இதன் விலை ₹ 65 லட்சம் இருக்குமாம் பெரும்பாலும் வெகுதூர பயணங்களுக்கு இந்த காரை தான் பயன்படுத்துவாரா. இந்த கார் கடந்த 2021ஆம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டதாகும்.

anushaka
anushaka

அடுத்ததாக AudiA6. இதன் விலை ₹65 லட்சம் இருக்கும். இந்த கார் 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இது 5 சீட்டர் வசதி கொண்ட சொகுசு கார் ஆகும். இவ்வாறு நடிகை அனுஷ்காவிடம் உள்ள கார்களில் மிக விலை குறைவான கார் என்றால் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் தான். பெட்ரோல் வேரியண்ட்டான இதன் மதிப்பு ரூபாய் 19 லட்சம் ஆகும். அதிக அனுஷ்கா சூட்டிங்கு செல்லும்போது இந்த காரில் தான் செல்வாராம் இது அவருடைய ஃபேவரைட் கார் என்றும் சொல்லப்படுகிறது.