Vidaamuyarchi : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், பிக்பாஸ் ஆரவ், ப்ரியா பவானி ஷங்கர் போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமல்ல இரண்டாவது ஹீரோயின்னாகவும் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் விறுவிறுப்பாக எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதில் அஜித்தின் பெரும்பாலான ஷூட்டிங்கில் முடிக்கப்படும் என தகவல்கள் வெளி வருகின்றன. விடாமுயற்சி படம் அடுத்த வருடம் ஜனவரி 30 முடிந்து ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி பண்ணும் என கூறப்படுகிறது.
இந்த தடவை விடாமுயற்சி சோலோவாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அப்படி இறங்கினால் மிகப்பெரிய வசூலை அள்ளும் என வளரும் கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படம் விடாமுயற்சி படத்துடன் மோதும் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துஉள்ளது.
கடந்த முறை துணிவு – வாரிசு படங்களும் வெளியே வந்து நன்றாக ஓடியதால் வெற்றி யார் பக்கம் என்பது நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் ஒருமுறை இவர்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்த முறை வெற்றி யார் பக்கம் அஜித்தா, விஜய்யா பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..