தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அப்படியே நடித்து பிரபலமானவர் நடிகர் இராமதாஸ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் காலமாகி உள்ள சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
1986 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ராமதாஸ் அதன் பிறகு ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, ராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம், உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ராமதாஸ்.
இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் எழுத்தாளரும் கூட. மேலும் இவர் பல திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் நடிகர் ராமதாஸ் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார் அந்த வகையில் வசூல்ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கி சட்டை, மெட்ரோ, உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் ராமதாஸ் அவர்கள் நேற்று மாரடைப்பு காரணமாக காலமாகி உள்ளார் இது தொடர்பாக அவரது மகன் கலை செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது தந்தை திரு இ.ராமதாஸ் அவர்கள் இன்று இரவு எம்ஜிஎம் மருத்துவமனையில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார் என்று பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவை பார்த்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவருடைய மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுகிறோம் என்று பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tamil Director/Actor #ERamdoss passed away last night in Chennai.. He suffered a heart attack..
Condolences to friends and family..
May his soul RIP! pic.twitter.com/kSQf6fxAb0
— Ramesh Bala (@rameshlaus) January 24, 2023