Vijayakanth : விஜயகாந்த் சினிமா மீதுள்ள அன்புவின் காரணமாக சென்னைக்கு வந்து படவாய்ப்பை தேடி கடைசியில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார் ஒரு கட்டத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்து விஜயகாந்த் தான் என பேசப்பட்டார்.
இப்படிப்பட்ட விஜயாக்காந்த் திரை உலகில் யாருக்கும் பயப்பட மாட்டார் நேர்மையாக இருப்பார் அதே சமயம் இல்லாதவர்களுக்கு உணவு, காசு கொடுத்து அவர்களை மரியாதையாக நடத்தினார். இதனால் விஜயகாந்தை பலரும் கேப்டன் என அழைத்து வந்தனர் . விஜயகாந்த் பின் அரசியல் பக்கம் சென்று அங்கேயும் வெற்றிகளை அள்ளினார்.
விடாமுயற்சி படத்தின் கதை இதுவா.? ஆசிரியராக நடிக்கும் அஜித்
திடீரென அனைத்திலிருந்தும் விலகி ஓய்வு எடுத்து வந்தார் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரொம்ப முடியாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயகாந்த் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்குமாறு கூறி உள்ளனர்.
விஷயத்தை கேள்விப்பட்டாக நடிகர் பொன்னம்பலம் விஜயகாந்த் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது.. என் வாழ்க்கையோட தரத்துல 90 சதவீதத்தை மாற்றினது விஜயகாந்த் தான் என் தங்கச்சி கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி பணம் இல்லாமல் உட்கார்ந்திருந்தேன் இரண்டு மாசம் கழிச்சு தான் ஷூட்டிங் அந்த நேரத்துல விஜயகாந்த் சார் கால் பண்ணினார். அப்ப என் சூழ்நிலையை சொன்னேன்..
அதுக்காக ஷுட்டிங்கை அடுத்த நாளே முடிச்சு எனக்கான சம்பளத்தோடு என் தங்கச்சி கல்யாணத்துல வந்து முதல் ஆளா விஜயகாந்த் உட்கார்ந்து இருந்தார். விஜயகாந்த் சார் எனக்கு தெய்வ மாதிரி.. மனுஷன் இல்ல தெய்வம் என் வீட்டுல கூட விஜயகாந்த் போட்டோ இருக்கும் வேறு யார் ஃபோட்டோவும் கிடையாது என கண்கலங்கியபடி பொன்னம்பலம் கூறியுள்ளார்.