பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோயின் நோரோ பதேஹி. 2014 ஆம் ஆண்டு வெளியான “ரோர்” என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் இவர் தன்னுடைய போக்கை மாற்றினார்.
மற்ற நடிகையின் போல இவரும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவது, கிளாமர் காட்சிகளில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அது பட வாய்ப்புகளை பெற்று தந்தது முதன் முதலில் பூரி ஜெகன்நாத் இயக்கிய “டெம்பர்” திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் சேர்ந்து ஐட்டம் பாடல்கள் ஆடி தெலுங்கு சினிமாவில் கால் தடம்பதித்தார் அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தான் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் மனோகரி பாடலுக்கு செம்ம கிளாமர் குத்தாட்டம் போட்டார். இதனை அடுத்து தமிழில் ஒன்னு, ரெண்டு திரைப்படம் நடித்து வந்தார். இந்த நிலையில் நோரோ பதேஹிவுக்கு பாலியல் சீண்டல் நடந்தாக அவரே சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.
எனது முதல் இந்தி படமான “ரோர் தி டைகர் ஆஃப் சுந்தர்பேன்ஸ்” என்கின்ற படத்தின் படப்பிடிப்பு வங்கதேசத்தில்.. உள்ள காடுகளில் நடைபெற்ற பொழுது அதில் என்னுடன் நடித்த சக நடிகர் தவறாக நடக்க முயன்றார் அத்துமீறி நடந்து கொண்ட அவருக்கு ஓங்கி கன்னத்தில் ஒரு அரை வைத்தேன் இதனை அடுத்து அந்த நடிகர் பதிலுக்கு என்னை அறைந்தார்..
கோபத்தில் நான் மீண்டும் அவருக்கு ஒரு அறை வீட்டேன். இதனை அடுத்து அந்த நடிகர் தலை முடியை பிடித்து இழுத்தார். பிறகு இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது இருவரும் ஒருவரை ஒருவர் மோசமாக திட்டி சண்டை போட்டுக் கொண்டும் என தெரிவித்தார். இவர்களுடைய இந்த பேச்சு தற்பொழுது பாலிவுட் பக்கத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.