தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஜெய்லர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து தமன்னா, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ராக்கி பட ஹீரோ மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வெளியாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என சில நடிகர் நடிகைகள் ஏங்கி கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு நடிகர் மற்றும் ரஜினி பட வாய்ப்பு வந்தும் அந்த படத்தை நிராகரித்து உள்ளார் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல..
நடிகர் சத்யராஜ் ரஜினியும் இதற்கு முன்பாக ஒரு தடவை மிஸ்டர் பாரத் படத்தில் நடித்துள்ளனர் அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு சத்யராஜுக்கு கிடைத்தது ஆனால் அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார் இதற்கு காரணம் காவிரி பிரச்சனையின் போது ஏற்பட்ட மன கசப்பு தான் என கூறப்படுகிறது.
இந்த பிரச்சனையை பேசும்போது ரஜினி குறித்து மறைமுகமாக சத்யராஜ் பேசியிருந்தாராம். ஆனால் ரஜினி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடிகர் சத்யராஜ் அதன் பிறகு சூப்பர் ஸ்டார் உடன் இதுவரை இணைந்து நடிக்கவே இல்லையாம்.. மீறி வந்தாலும் அந்த வாய்ப்பையும் வேண்டாம் என உதறித் தள்ளி உள்ளார் என கூறப்படுகிறது.