ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்.! இவர் மட்டும் நடித்திருந்தால் படம் வேற லெவல் தான்

rajini-villan-tamil360newz
rajini-villan-tamil360newz

A famous actor who refused to be a villain to Rajini : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தலைவர் ரஜினி, இவர் இந்திய சினிமாவிலேயே உச்ச நடிகர்களில் ஒருவர், 40 வருடமாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார், அதேபோல் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய இளமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஒரு காலத்தில் ரஜினிகாந்த் மற்ற நடிகர்களுக்கு சரிசமமாக தான் இருந்தார், ஆனால் அந்த நடிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயரவில்லை, ரஜினிகாந்தின் சுறுசுறுப்பான நடிப்பும் தனக்கே உரித்தான ஸ்டைலில் இதுவரை எந்த நடிகரிடமும் பார்க்க முடியாது. அதனால்தான் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள்.

80களில் இருந்து தற்பொழுது உள்ள இளசுகள் வரை ரஜினிகாந்தை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை, ரஜினிகாந்த் நடிப்பு இப்பொழுது உள்ள முன்னணி நடிகர்களுக்கு கொஞ்சம் டப்  தான். தற்பொழுது உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் படத்தில் ஏதாவது ஒரு சிறிய காட்சிகளிலாவது நடித்துவிட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்க ரஜினியின் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை உதறித்தள்ளி கெத்து காட்டி உள்ளார் பிரபல நடிகர் ராஜ்கிரண், இது கோலிவுட் வட்டாரங்களில் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தது, ஆம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் முதன் முதலில் உருவாக்கிய திரைப்படம் சிவாஜி இந்த திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த திரைப்படத்தில் தான் ரஜினிக்கு வில்லனாக ஆதி கேசவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சிவாஜி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஆதிகேசவன் கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிகர் ராஜ்கிரண் தான் நடிக்க இருந்தாராம், ராஜ்கிரனிடம் நடிப்பதற்கு அணுகிய பொழுது, இந்த திரைப்படத்தில் நடித்தால என்னுடைய இயற்கையான நடிப்பு மறைந்து விடும் என இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார், ராஜ்கிரன் எல்லா திரைப்படத்திலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவார், அப்படி இருக்க தன்னுடைய எதார்த்தமான நடிப்பு பழகிய எனக்கு முழுக்க முழுக்க வில்லனாக ஒத்து வராது என கூறிவிட்டாராம்.

அப்படியிருந்தும் பின்பு அதிக பணம் கூட தருகிறோம் என்று கூறியுள்ளார்கலாம், அதற்கு ராஜ்கிரன் பணத்திற்கு நான் எப்பொழுதும் ஆசைப்பட்டதெ இல்லை என்ன ஒரே வார்த்தையில் அனைவரும் வாயையும் மூட வைத்துவிட்டாராம் அதன்பிறகு இந்த கதாபாத்திரம் சத்யராஜிடம் சென்றது ஆனால் சத்யராஜும் அதை மறுத்து உள்ளார், அதன் பிறகு தான் ஆதிகேசவன் கதாபாத்திரத்தில் சுமன் நடித்தார்.