ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகர்.! அவருக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா அருண்..

eramana-rojave-2
eramana-rojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்த நிலையில் இதனை அடுத்து இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.

அது குறித்த ஏராளமான ப்ரோமோக்கள் வெளியாகி வரும் நிலையில் பாரதி கதாபாத்திரத்தில் சன் டிவியின் ரோஜா சீரியலின் மூலம் பிரபலமான சிம்பு சூரியன் நடிக்கிறார் இவரை அடுத்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வரும் நிலையில் பாரதியின் அம்மாவாக சௌந்தர்யா நடித்து வருகிறார். மேலும் இவர்களை எடுத்து ஏராளமான புதுமுக பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் அருண். இவர் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இவர் நடிக்க இருக்கும் அடுத்த சீரியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலில் இருந்து விரைவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விலக இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக இந்த சீரியலில் அருண் அறிமுகமாக இருக்கிறார. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து விலகும் நடிகர் திரவியமாக இருக்கக் கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விரைவில் ஈரமான ரோஜாவே சீரியலில் அருண் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் எந்த நடிகர் விலக இருக்கிறார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இதனை தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வருகின்றனர்.