Jailer : பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை படத்தை எடுத்தார். ரஜினியுடன் இணைந்து தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, விநாயகன், மாரிமுத்து என பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்தனர்.
படம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருந்ததால் அனைவரது மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வரை ஹவுஸ் புல்லாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதுவரை மட்டுமே ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் எந்த ஒரு பெரிய படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூல் குறைய வாய்ப்பு இல்லை என பலரும் அடித்து கூறுகின்றனர்.
ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்மையில் சக்சஸ் மீட்டு எல்லாம் வைத்து கொண்டாடினார்கள் இதனை தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொடங்கி பலரும் படத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர் இந்த நிலையில் நெல்சன் திலிப் குமார் பேட்டி ஒன்றில் ஜெயிலர் படத்தின் வெற்றியை 6 மாதங்களுக்கு முன்பே ஒருவர் கணித்து விட்டார் என கூறியுள்ளார்.
அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல நடிகர் விஜய் தான் என கூறினார். இது குறித்து விஜய் வி டிவி கணேஷிடம் கூறியதாகவும் அவர் அதை தன்னிடம் பெருமையாகவும் பகிர்ந்து உள்ளதாகவும் நெல்சன் கூறி உள்ளார். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்கள் எதிர்கொண்ட பொழுது தன்னை தேற்றும் வகையில் விஜய் தொடர்ந்து கால் செய்தும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியும் தன்னை தொடர்பில் இருந்ததாகவும் நெல்சன் கூறியிருந்தார்.