“பொன்னியின் செல்வன்” படத்தை பார்க்க செயினை அடமானம் வச்ச பிரபல நடிகர்..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப் போடும்..

ponniyin-selvan

இயக்குனர் மணிரத்தினம் பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, கிஷோர், பிரபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் சிறப்பான கதாபாத்திரத்தை கொடுத்து படத்தை எடுத்துள்ளார் படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் இந்த படம் முதல் நாளே எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளுவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த நாட்களிலும் பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. பலரும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ்..

அண்மை காலமாக எந்த படம் வெளிவந்தாலும் முதல் நாள் முதல் ஷோவை பார்த்து விடுகிறார். அதேசமயம் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தை புகழ்ந்து பேசுவது மேலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றியும் பேசி வருகிறார். அதுபோல இப்பொழுதும் கூல் சுரேஷ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க குதிரையில் வந்து இறங்கினார்.

அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது அவர் சொன்னது நான் செயினை அடமானம் வைத்துவிட்டு குதிரையில் வந்ததாகவும் இனி படத்தை பார்க்க போவதாகவும் அவர் கூறி உள்ளார்.. இவர் இப்படி சொன்னது அங்கு இருப்பவர் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது..

cool suresh
cool suresh