விருமாண்டி பட நடிகையை அழ வைத்த பிரபல நடிகர்.? என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..

abirami
abirami

வானவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அபிராமி.. முதல் படமே  ஹிட் அடித்ததை தொடர்ந்து  மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓடினார் இந்த நிலையில் தான் கமல் இயக்கி நடித்த விருமாண்டி திரைப்படத்தில் அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் அபிராமிக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து கமலுக்கு இணையாக பின்னி பெடல் எடுத்தார் இந்த படத்திற்கு பிறகு பல வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் இவரை ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார். அதன் பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.  இப்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான் பெரிதும் நாடி வருகின்றன.

அந்த வாய்ப்பை விடாமல் அபிராமி நடித்து வருகிறார். இவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது விருமாண்டி படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் மதுரை தமிழ் குறித்து கமலஹாசன் பேசிய வீடியோ காண்பிக்கப்பட்டது.  அபிராமி விருமாண்டி படத்தில் நன்றாக நடித்திருந்தார் அவர் வேற்று மொழி தெரிந்தவர் அவர் தெக்கித்தி மொழி எப்படி பின்னி எடுக்கிறார் பாருங்கள்..

இவர் சின்ன சின்ன விஷயங்களைக் கூட அவ்வளவு அழகாக பேசி இருப்பார் நான் எல்லா ஹீரோயின்களுக்கும் டப்பிங் அவங்களைத்தான் கூப்பிடுவேன் விஸ்ரூபம் படத்திலும் அவரை வைத்து தான் டப்பிங் செய்தேன் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் போல் பேச வேண்டும் அதனால் தான் அவரை வைத்து பேச வைத்தேன். எல்லாவற்றையும் புரிந்து பேசுபவர் இவர் சிறந்த நடிகை இன்டஸ்ரி விட்டு போயிருக்க கூடாது இருந்தாலும்..

இப்போ நல்லா தான் இருக்காங்க ஒரு  பத்துப் பாட்டுக்கு காஷ்மீரில் டான்ஸ் ஆடுவதை இந்த முள்ளுக்காட்டில் நடந்து வரும் ஒரு ரொமான்ஸ்க்கு காட்சிக்கு ஈடாகாது என கூறி இருந்தார் இதை பார்த்த அபிராமி சற்று கண்கலங்கி விட்டார் பிறகு பேசிய நடிகை அபிராமி.. இண்டஸ்ரில் இருக்கும்  எல்லோருக்கும்  நான் கமல் சார் ஃபேன் என்று தெரியும் விருமாண்டி படத்தின் போது எதற்காக என்னை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன்.. அவ்வளவு தீவிரமான பேன் நான் அவர் சொன்னது போல் நான் திரை துறையை விட்டு போகிற கூடாது.

ஆனால் மீண்டும் என்னை திரைத்துறை வந்தது அவர்தான்.. நான் நியூயார்க்கில்  ஷூட்டிங்கில் இருக்கிறேன் நீ வா வந்து டப்பிங் பண்ணு என்று சொல்லி அழைத்தார் என்னிடம் எதோ இருக்கு என்று நினைத்ததால் என்னை அழைத்திருக்கிறார் ஆனால் கமல் சார் வேறு யாரையாவது இப்படி சொல்லி இருக்கிறாரா என்று தெரியவில்லை அவர் என்னை பற்றி இப்படி சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என கூறினார்