சினிமாவில் பல திறமையான நடிகர்கள் நடிகைகள் இருந்து வருகின்றனர் ஆனால் அவர்களின் திரைமையை வெளி வெளிப்படுத்த எந்த கதாபாத்திரங்கள் எதுவும் கிடைக்காததால் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இப்படி இருந்தும் தனக்கு இதுதான் வரும் என்று ஒரே கதாபாத்திரத்தை கொடுப்பதால் அந்த நடிகர்கள் அப்படியே ரசிகர்கள் மத்தியில் நிலையாக நின்று விடுகிறார்கள்.
இவ்வாறு பல நடிகர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்ததுண்டு அப்படி நல்ல திறமை உள்ள பிரபல நடிகர் ஒருவர் பல நடிகர்களுடன் துணை நடிகராக நடித்து பிரண்ட் என்று முத்திரை குத்தியதால் சினிமாவில் அவரால் முன்னேற முடியாமல் போனது இதற்கு தற்போது அவர் எப்படியாவது சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கஷ்டப்பட்டு வருகிறார்.
அதாவது இயக்குனர் மிஸ்கின் மற்றும் பா ரஞ்சித் இயக்கம் பெரும்பான்மையான படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார் நடிகர் கலையரசன். இவர் நடிப்பில் வெளியான மதயானை கூட்டம் படத்தில் இவருக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்திருப்பார்கள் இதனால் பலரிடமிருந்து பாராட்டுகளை பெற்றார்.
ஆனால் மெட்ராஸ், முகமூடி, தானா சேர்ந்த கூட்டம், ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை,நட்சத்திரம் நகற்கிறது,போன்ற படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதிலும் இவர் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருந்தார் இதனால் இவருக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனது.
இதனை தொடர்ந்து தற்போது கலையரசன் பருத்திவீரன் கெட்டப்பில் பேட்டை காளி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் ராஜ்குமார் இயக்கம் இந்த தொடரில் கலையரசன், ஷீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பேட்டை காளி வெப் தொடர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி ஆகா ஓ டி டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று கலையரசன் நம்புகிறார்.