விஜய் டிவியின் பிரபல சீரியலில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய பிரபல நடிகர்.!

zee tamil

பொதுவாக சமீப காலங்களாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.மேலும் தொடர்ந்து வெள்ளித்திரைகள் நடித்த தன்னுடைய இளமை வயதில் கலக்கி வந்த நடிகர், நடிகைகள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்களுக்கு திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் ரஞ்சித். இவர் பொன் விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மேலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் வயதான காரணத்தினால் இவருக்கு சமீப காலங்களாக இதற்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலைகள் சீரியல்களின் நடிப்பதை தொடங்கியுள்ளார் அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த சீரியலில் வித்தியாசமான கதைகளைத்துடன் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு தற்பொழுது ரஞ்சித் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.

pa ranjith
pa ranjith

இவருடைய மனைவி பிரியா ராமன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்துள்ள இந்நிலையில் தற்போது ரஞ்சித் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிக்க இருக்கும் சீரியல் புதிதாக அறிமுகமாக இருக்கிறதா இல்லை ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாரா என்ற தகவல் தற்பொழுது வரையிலும் வெளியாகவில்லை மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் சீரியல் ப்ரோமோ மூலம் தெரிந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.