தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி பின்னர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் 1971 ஆம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திமாக நடித்து பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் நடிகர் பப்லு ப்ரீத்திவிராஜ் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா என்ற திரைப்படத்தில் பயங்கர விள்ளனாக நடித்திருப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
அதன் பிறகு நடிகர் பப்லு பிருத்திவிராஜ் பல சீரியல்களிலும் நடித்து உள்ளார் இவர் நடிப்பில் வெளியான பல சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிப்பில் வெளியான சீரியல்கள் ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார் பப்லு பிரித்திவிராஜ்.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் 1994 ஆம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 27 வயதில் அகத் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை பப்லு அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகி வருகிறது. மலேசியாவில் தொழில் தொடங்க அந்தப் பெண் பப்ளுக்கு உதவி புரிந்துள்ளதாகவும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த தகவல் வெளியான போது ரசிகர்கள் 57 வயதிலும் இது உங்களுக்கு தேவையா என்று கழுவி ஊத்தி வருகின்றனர்.