தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் 80 மட்டும் 90களில் இருந்து தற்போது வரைக்கும் சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினி.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினியின் படம் எதுவுமே சரி வர ஓடவில்லை அதனால் இந்த படம் ரஜினிக்கு ஒரு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி அவர்கள் ரஜினி இடம் ஒரு கதையை கூறி இருக்கிறாராம் அந்த கதை ரஜினிக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் அந்த படத்தை ரிஜெக்ட் செய்துவிட்டாராம்.
டான் படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் டான் படத்தின் பட குழுவினர் அனைவரையும் அழைத்து சந்தித்து இருக்கிறார் அப்போது சிபி சக்கரவர்த்தியிடம் தனக்கு ஏற்றவாறு ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என்று கூறி இருக்கிறாராம் உடனே இல்லை என்று சொன்னால் வாய்ப்பு கிடைக்காது என்று எண்ணி சிபி சக்கரவர்த்தி ஒரு ஒன்லைன் கதையை கூறியிருக்கிறார்.
அந்த ஒன்லைன் கதை பிடித்து போய்விடவே முழு ஸ்கிரிப்ட்டை எழுதி வர வேண்டும் என்று கூறி இருக்கிறார் ரஜினி அவர்கள் அதன் பிறகு முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி ரஜினியிடம் கூறிய போது ரஜினிக்கு இந்த கதை திருப்தி தரவில்லை அதனால் இந்த கதையை ரிஜெக்ட் செய்து விட்டாராம்.
இதனால் நொந்து போயிருந்த சிபி சக்கரவர்த்தியை சமாதானம் செய்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன் இதனால் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.