தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தெள்ளத் தெளிவாக காட்டி இருந்தது.
படத்தின் ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை தற்பொழுது வரை மட்டுமே 20 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது வருகின்ற நாட்களிலும் விடுதலை படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வெற்றிமாறன் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்குமே நல்ல முன்னுரிமை இருக்கும் அதனால் இவரது படங்களில் நடிக்க பல நடிகர், நடிகைகள் போட்டி போடுவது வழக்கம் அப்படி ஆடுகளம் படத்தில் தனுஷ்க்கு நண்பனாக நடித்து பிரபலமடைந்தார் முருகதாஸ்.. படத்திற்கு பிறகு பலரும் ஆடுகளும் முருகதாஸ் என அழைத்தனர் மேலும் பல பட வாய்ப்புகளை கைப்பற்றி தற்பொழுது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஆடுகளம் முருகதாஸ் வெற்றிக்குமாரனிடம் வாய்ப்பு கேட்டது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார் அதில் அவர் சொன்னது.. வெற்றிமாறன் ஒரு முறை விழாவில் கலந்துகொண்டு தனது காரில் வீட்டுக்கு செல்லும் போது அவரது காரின் முன்பு சென்று படுத்து விட்டாராம் முருகதாஸ்.. இதைப் பார்த்த வெற்றிமாறன் திகைத்துப் போய் காரை விட்டு இறங்கி முருகதாஸ் பார்த்து “யோவ் என்னய்யா பண்ற” உனக்கு என்ன வேணும் என கேட்டதற்கு முருகதாஸ் சார் எனக்கு உங்க அடுத்த படத்துல வாய்ப்பு வேணும் என கூறினாராம்..
அப்போது வெற்றிமாறனுக்கு கோபம் வந்துவிட்டதாம் நானா கூப்பிடுற வரைக்கும் நீ என்னை வந்து பார்க்கக் கூடாது என்று அவரை கட்டிப்பிடித்து அவரை அனுப்பி விட்டாராம் இப்படித்தான் இருவரும் முதலில் சந்தித்துக்கொண்டனர் அதன் பிறகு ஆடுகளம், விசாரணை என வெற்றிமாறனின் பல்வேறு திரைப்படங்களில் முருகதாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.