தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிகமாக சம்பளம் கேட்ட பிரபல நடிகரை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ஆம் பிரபல நடிகர் ஒருவர் தனது முதல் படத்தில் நடிக்க முன்பதிவாக 8 லட்சம் கேட்டு உள்ளார். அதன்பிறகு படம் முடிந்தவுடன் மீதமுள்ள நான்கு லட்சத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார் இதனைக் கேட்ட தயாரிப்பாளர் சற்று அதிர்ச்சி அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது படத்தின் மொத்த செலவே 12 லட்சம் தான் ஆனால் அவர் கேட்கும் சம்பளமும் படத்தில் முழு பட்ஜெட்டை கேட்பது போல இருந்தது என்று அது தயாரிப்பாளர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தின் முழு பட்ஜெட்டையும் உங்களுக்கு சம்பளமாக கொடுத்து விட்டால் தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்வது இயக்குனர்களுக்கு என்ன செய்வது என்று அவர் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடிகரோ இதெல்லாம் உங்களுடைய பொறுப்பு தான் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு வேறு வழி இல்லாமல் அந்த நடிகரை நிராகரித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த இயக்குனர் ஒரு பேட்டியில் ஆரம்பமான முதல் படத்திலேயே ஒரு நடிகர் என்னிடம் 12 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளார்.
தற்போது உள்ள முன்னணி நடிகர்களே ஆரம்பத்தில் இவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதை கே ராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கே ஜி எஃப் படம் நடிகர் தனது முழு சம்பளத்தை படத்தில் செலவிட சொல்லியதாகவும் படம் வெற்றி பெற்ற பிறகு என்னுடைய சம்பளத்தை கொடுக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறாராம் அதை கேட்ட கே ராஜன் அவர்கள் கே ஜி எஃப் பாட யாஷ் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.