நடிகர் விஜயகாந்தின் போட்டோவை பார்த்த பிரபல நடிகர் ஒருவர் கதறி அழுதுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் 70 காலகட்டத்தில் இருந்து 2010ஆம் ஆண்டு வரையிலும் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் இவர்களுக்கு பிறகு சினிமாவிற்கு அறிமுகமாகி ஆக்ஷன் ஹீரோவாக சினிமாவில் பிரபலமடைந்தார். தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய 100வது படமாக அமைந்த கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததற்கு பிறகு இவரை கேப்டன் விஜயகாந்த் என அனைவரும் அழைக்க தொடங்கினர். இவ்வாறு சிறந்த நடிகராக இருந்து வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினார்.
அரசியல் தொடங்கிய சில வருடங்களிலேயே தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறிய நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எனவே இதன் காரணமாக இவரால் நடக்க முடியாமலும், பேச முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார். தன்னுடைய மனைவி, மகன்களின் உதவி உடன் அவ்வப்பொழுது தனது கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜயகாந்த்.
சினிமாவில் இருப்பவர்களை தாண்டி பலருக்கும் உதவி செய்த விஜயகாந்த் இப்படியானதை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் விஜயகாந்தின் இப்படி ஒரு நிலைமையில் பார்க்க முடியவில்லை என பேட்டியின் பொழுது அழுது வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜயகாந்தின் போட்டோவை பார்த்துவிட்டு நடிகர் ராதாரவி கதறி அழுத்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் என் நண்பனை எனக்கே அடையாளம் தெரியவில்லை நேரில் சென்று பார்க்கலாம் என்றால் அவரது குடும்பத்தினர் அனுமதி தர மறுக்கிறார்கள் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதாவது பிரபல இயக்குனரும், நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்ஏ சந்திரசேகர் நேரில் சென்று நலம் விசாரித்த பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது அதனைப் பார்த்துவிட்டு தான் ராதாரவி இவ்வாறு அழுதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது