தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இதனை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அந்த இரண்டு படங்களில் ஒரு படத்தினை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.
அந்த படத்திற்கு லால் சலாம் என பெயர் வைத்துள்ளார்கள் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முதலில் வேறு ஒரு நடிகர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.
ஆனால் அவர் அதிகம் சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் எனக் குறிப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுத்தாராம். ஆம், அதாவது இந்த படத்தில் முதலில் அதர்வாவை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதால் இந்த படத்தில் இருந்து அவரை தூக்கு விட்டு விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மகளின் இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது மேலும் இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் கதாநாயகி யார் என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.