தமிழ் சினிமா உலகில் ரசிகர்கள் மத்தியில் இரு தூண்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் ஓரிரு வருடங்களுக்கு ஒரு படத்தை கொடுத்தாலும் சிறப்பான முறையில் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களும் இவர்களது படங்கள் வெளி வருகிறது என்றால் அதனை கோலாகலமாக கொண்டாடி தீர்த்து விடுகின்றனர்.
அதனால் அந்த படங்களும் நல்ல வசூலை அள்ளுகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் அஜித் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சியடைய வைக்கும். ஆனால் அண்மைக்காலமாக அப்படி நடக்குவதில்லை ஏனென்றால் இரு டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் ஏதாவது ஒரு படம் தான்.
சிறப்பாக இருக்கும் அதனால் அந்த படத்தின் வசூலே அதிகமாகுவதால் ஒரு படத்தின் வசூல் குறையும் இதனை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்களோ தற்போது டாப் நடிகர்களின் படங்களை ஒன்றாக வெளியிடாமல் வெவ்வேறு நாட்களில் வெளியிட்டு நல்ல வசூலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படம் ஒரே தினத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளனர்.
நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் தயாரிப்பாளர் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டம் போட்டுள்ளார். இதே போல அஜித் தற்போது அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்.
ஆனால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே செல்வதால் பொங்கலுக்கு வெளியிடலாம் என படுக்குழு திட்டம் போட்டுள்ளது. இதனால் கடந்த 9 வருடங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது இதற்கு முன் அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் ஒரே தினத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.