திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலம் அடைய முடியும் அந்த வகையில் சுந்தர் பிச்சை. ஓட்டு மொத்த தமிழ்நாட்டுக்கு மே பெருமை சேர்த்தவர் இவர் google நிறுவனத்தின் சிஇஓவாக தற்பொழுது பணியாற்றி வருகிறார் இவர் ஆரம்பத்தில் பள்ளி, கல்லூரியில் நன்றாக படித்து படி படியாக முன்னேறி..
தற்பொழுது google நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார். இப்படிப்பட்ட சுந்தர் பிச்சைக்கு மாத வருமானம் மட்டுமே கோடி கணக்கில் என்பதால் அமெரிக்காவிலேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார்.
இருந்தாலும் சுந்தர் பிச்சை தமிழ்நாடு பக்கம் பக்கம் வந்தால் தனது சென்னையில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் சுந்தர் பிச்சை தனது சொந்த வீட்டை விற்று உள்ளார். அது குறித்து ஒரு தகவலும் கிடைத்துள்ளது.
சுந்தர் பிச்சை அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளதால் இனி தனக்கு சென்னையில் வீடு வேண்டாமென முடிவெடுத்து தந்து சொந்த வீட்டை விற்று உள்ளார் அந்த வீட்டை மிகப்பெரிய தொகை கொடுத்து பிரபல நடிகர் ஒருவர் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன அவர் வேறு யாரும் அல்ல..
நடிகரும், தயாரிப்பாளருமான சி மணிகண்டன் தான் google நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொந்த வீட்டை வாங்கி உள்ளார் அந்த வீட்டை இடித்துவிட்டு தற்பொழுது வில்லா ஒன்றை கட்ட இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல தகவல் பரவி வருகிறது.