2023ல் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது. 2022 காண விஜய் திரைப்படங்கள் ஒரே ஒரு திரைப்படமான பீஸ்ட் திரைப்படம் மட்டும் தான் வெளியானது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்த விஜய் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அடுத்த ஆண்டு தளபதி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக டபுள் ட்ரீட் உள்ளதாக தற்போது சினிமா வட்டாரத்தில் கூட்டப்பட்டு வருகிறது. அதாவது பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தளபதி 67 திரைப்படம் 2023 தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து  ஒரே ஆண்டில் விஜயின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள்  மிகுந்த சந்தோஷத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயின் படங்கள் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஆண்டிற்கு ஒரு படம் கொடுத்து வந்த விஜய் 2023 ஆம் ஆண்டு இரண்டு படங்கள் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான 2011 இல் காவலன் மற்றும் வேலாயுதம் படங்கள் வெளியானது அதேபோல 2012 இல் துப்பாக்கி மற்றும் நண்பன் படங்கள் வெளியானது இப்படி ஒரே ஆண்டில் இரண்டு படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய் கடந்த ஐந்து வருடங்களாக ஒரே ஒரு படம் மட்டும் தான் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு விஜயின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.