பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் கதிர்.? காரணம் இதுதான்..

kumaran
kumaran

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜ், சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்தில் நடித்து வரும் நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியல் முக்கியமாக பிரபலம் அடைவதற்கு காரணம் கதிர்-முல்லை கதாபாத்திரம் தான். அந்த வகையில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் இந்த சீரியலில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் நடித்து வருகிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்த இவர் சமீபத்தில் இயக்குனரும் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘வதந்தி’ என்ற ஓடிடி தொடரில் நடித்திருந்தார். இதனை அடுத்து தற்பொழுது இவர் ஹிந்தி மொழியில் பிரபலமான ஹாங்கமா ஓடிடி நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரிக்க இருக்கும் ‘மாய தோட்ட’ என்ற தொடரில் நடித்திருக்கும் நிலையில் 6 எபிசோடுகளுடன் வெளியானது.

இதில் சைத்ரா ரெட்டி, அமீத், குமரன்என பல பிரபலங்கள் நடித்திருந்தனர் இந்த சீரியலில் கதாநாயகனாக கதிர் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், இயக்குனர் எஸ்கே சூர்யா நடித்த வதந்தி படத்தில் நான் நடித்தது எனக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. சினிமாவை நோக்கி பல காலங்களாக நான் பயணித்துக் கொண்டிருந்தேன் ஆனால் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் தற்பொழுது சினிமா முற்றிலுமாக மாறிவிட்டது.

maya thotta
maya thotta

இதனை பார்த்த எனக்கு வெப் சீரிஸ் கூட நன்றாக இருக்கிறது என தோன்றியது. நான் வதந்தி தொடரில் நடித்ததை பார்த்தது தான் என்னை ‘மாய தோட்ட’ தொடருக்கு நடிக்க அழைத்தார்கள். இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் ‘இசட் பிரிவில்’ வரும் தலைமை அதிகாரி அதனால் என்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டி இருந்தது. எனவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் லுக்குடன் வருவேன் ஆனால் அந்த தொடரில் பலவிதமான மாறுதல்கள் தேவைப்பட்டது.

எனவே நான் வதந்தி தொடரின் பொழுது கொஞ்சம் எடை போட வேண்டியது இருந்தது ஆனால் இந்த தொடருக்காக அதை குறைத்து வருகிறேன். ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரியல் கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் விட்டு விலக அதிக வாய்ப்பு இருக்கிறது.