இயக்குனரின் மகள் என்பதால் உங்களுக்கு பட வாய்ப்பு ஈசியாக கிடைக்கிறதா.? அதிதி சங்கரின் பதில்..

aditi-shankar
aditi-shankar

சினிமா உலகில் வாரிசு நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பை முடித்திருந்தாலும் அவருக்கு சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஒரு வழியாக படிப்பை முடித்துவிட்டு தனது விருப்பத்தை அப்பாவிடம் சொல்ல அவரும் சரி நீ இதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறாய் போய் நடி என கூறி உள்ளார். உடனே தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அதிதி சங்கர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுவும் துணிச்சலான பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளாராம். மேலும் இந்த படத்திற்காக அவர் ரொம்பவும் மெனக்கெட்டு நடித்துள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அதிதி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதாவது நான் சினிமாவில் கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் நடிக்க ஆசைப்பட்டேன். அதில் இரண்டுமே தற்போது நடந்துள்ளது. விருமன் படத்தில் கார்த்திவுடன் நடித்தேன் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடிக்க இருக்கிறேன் என வெளிப்படையாக கூறினார். சமிபத்தில் பேட்டியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஷங்கரின் மகள் பதில் அளித்து உள்ளார்.

உங்களுக்கு சினிமாவில் ஈசியாக வாய்ப்பு கிடைத்ததா என கேள்வி கேட்டனர் அதற்கு அதிதி ஷங்கர் அது உண்மைதான் ஆனால் சினிமா உலகில் நான் நீண்ட தூரம் பயணிக்க தனது திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே முடியும் அந்த வகையில் அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டி நடிப்பேன் என அவர் கூறினார். இவர் நடித்த விருமன்   திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.