பொதுமக்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இதன் மூலம் தங்களுடைய தனித்திறமையை வீடியோ மூலம் பதிவிட இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்கள். அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்.
இவர் தற்பொழுது தன்னுடைய தங்கையுடன் நடனம் ஆடி இருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஒரு சில படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக அதனை அனைவரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் எனிமி.
இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த நிலையில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தினை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருந்தார். பிறகு தமன் இசையமைக்க ஒளிப்பதிவாளராக ஆர்.டி ராஜசேகரம், கலை இயக்குனராக டி.இராமலிங்கமும் பணிபுரிந்திருந்தனர்.
இந்த படம் கடந்த 2021ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. அதுவும் முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்த டும் டும் பாடல் தான் தற்பொழுது வரையிலும் பிரபலமாக இருந்து வருகிறது. தமன் இசையமைப்பில் உருவாகி இருந்த திருமண கொண்டாட்ட பாடலான மால டும் மஞ்சற டும் டும் பாடல் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகிறது.
மேலும் தற்பொழுது எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த பாடலை தான் போட்டு வருகின்றனர். இந்த பாடலில் விஷால், மிருணாளினி இருவரும் இணைந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய தங்கை ஸ்டேஸ்டா ஐயருடன் நடனமாடி இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.