டிஆர்பிஎல் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுப்புது நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேஷன் சுற்று நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே காளையன் கிஷோர், ராஜ்குமார், ராஜ் ஐயப்பா, ஆகியோர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது இந்த வாரம் யார் வெளியே போகப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது இந்த நிலையில் அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது எலிமினேஷன் விஜே விஷால். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் இந்த நிலையில் இந்த வாரம் நடுவர்களிடமிருந்து குறைந்த மதிப்பெண் பெற்ற லிஸ்டில் விஜே விஷால் இடம் பெற்றுள்ளதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விஜே விஷால் வெளியேறுகிறார்.
விஜே விஷால் வெளியேறும் பொழுது அவருடன் இருக்கும் சகா போட்டியாளர்கள் மற்றும் கோமாளியாக இருந்த மோனிஷா மற்றும் சிருஷ்டி இருவரும் கண்கலங்கினார்கள். இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் தொடர்ந்து நான்கு எலிமினேஷனும் ஆண் போட்டியாளர்கள் மட்டுமே இதுவரை குக் வித் கோமாளி 4ல் இருந்து வெளியேறி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இவர் வயல்டு கார்டு சுற்றில் என்ட்ரி கொடுப்பார் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.