தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போ இருக்கும் நடிகர்களின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக இந்த வயதிலும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதால் இவரை ரசிகர் மற்றும் மக்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
இவரது நடிப்பில் அண்மையில் கூட தீபாவளியன்று அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்களை பெருமளவில் கவர்ந்த இருந்தாலும் ரசிகர்களை பெருமளவு கவரவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது ஆனால் உண்மையில் இந்த திரைப்படம் ஆக்சன் சென்டிமெண்ட் என இருப்பதால் படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ரஜினிக்கு இது பிடித்த படமாக தற்பொழுது அமைந்துள்ளது இந்த திரைப்படம் இதுவரை கிட்டத்தட்ட 200 கோடி வசூலை அள்ளிய தகவல்கள் வருகின்றன ஆனால் உண்மையான தகவல் படி இந்த திரைப்படம் இதுவரை 160 அல்லது 150 கோடி தான் வசூல் செய்ததாக கூறப்படுகிறது அண்மையில் கூட ஒரு தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
அதாவது அண்ணாத்தா திரைப்படத்திற்காக ரஜினி சுமார் 30 கோடியை குறைத்துக் கொண்டு தான் தனது சம்பளத்தை வாங்கி உள்ளார் என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளப் பக்கங்களில் நிலவி வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அண்ணாத்த திரைப்படம் எங்கு எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது எங்கு தனது வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் அண்ணாத்த திரைப்படம் 90 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் தெலுங்கில் அண்ணாத்த திரைப்படம் தோல்வியை கர்நாடகாவில் 10 கோடி அள்ளியுள்ளது. வெளிநாட்டில் 18 கோடி கேரளாவில் தோல்வி ஓவர் சீஸ் வியாபாரங்களில் மூலம் கிடைத்தது 30 கோடி என தகவல் வெளிவந்துள்ளது.