போடா எச்ச என மேடையிலேயே பயில்வானை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.! பொது இடத்தில் நடந்த தரமானசம்பவம்..

bayilvan-ranganathan
bayilvan-ranganathan

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்து தற்போது முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தயாரிப்பாளர் கே ராஜன். இவர் தற்போது வரையிலும் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள் இந்த நிலையில் கே ராஜன் அவர்கள் மேடைகளில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டு வருகிறார்.

இதேபோல தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரங்கநாதன். அதன் பிறகு இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அந்த youtube சேனலில் சினிமாவிற்கு பின்னால் நடக்கக்கூடிய அந்தரங்க வாழ்க்கையை பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் பல நடிகைகளின் அந்தரங்க செயல்களை கூறி வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் கே ராஜனும், பயில்வான் ரங்கநாதனும் ஒரு பொது மேடையில் அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக போடா, வாடா என்று சொல்லி திட்டி உள்ளனர் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களுடைய அந்த சண்டை காட்டுதீ போல் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் கே ராஜன் அவர்கள் ஆத்திரத்தில் பயில்வனை பார்த்து போடா எச்ச என்று கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் பென்மார்களை இழிவாக பேசுகிறான் என்று பயில்வான் ரங்கநாதனை விலாசியுள்ளார்.

அது எதற்காக என்றால் பலமுறை நடிகைகளின் அந்தரங்க வாழ்வைப் பற்றி கூற வேண்டாம் என்று ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் இடம் கூறி இருக்கிறாராம். அது அவங்களுடைய சொந்த வாழ்க்கை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று கூட  கூறியிருக்கிறாராம் கே ராஜன். ஆனால் அதைக் கேட்காமல் பயில்வான் தொடர்ச்சியாக இதே போல் வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் ஆத்திரத்தில் மேடையில் திட்டி இருக்கிறார்.

இப்படி ஆரம்பித்த இவர்களுடைய சண்டை தற்போது பெரிய அளவில் மாறிவிட்டது பொது மேடையில்  கே ராஜனும் பயில்வான் ரங்கநாதனும் போடா வாடா என்று சொல்லி திட்டிக் கொள்ளும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.