தனுஷ் நடிப்பில் தற்பொழுது வாத்தி திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பிரபலம் ஒருவர் தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வாழும் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.
இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் நிலையில் தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதன்முறையாக தனுஷ் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்துள்ளார்.
மேலும் இவரை அடுத்து சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தினை சித்தாரா என்டர்டைன்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. பொதுவாக தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாவிலும் தனக்கென ஒரு பெருத்த ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தது இந்த படத்தினை செல்வராகவன் இயக்கி இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் வாத்தி படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 4ம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் படக்குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்பொழுது வாத்தி படத்தின் சென்சார்போர்ட் உறுப்பினரான உமர்சன் வாத்தி படத்தை பாராட்டி உள்ளார். அதாவது நேற்று படத்தைப் பார்த்து விட்டு நேற்று முன்தினமே வாத்தி படம் பார்த்தேன்.. தனுஷ் தான் பெஸ்ட்.. என்று குறிப்பிட்டு இருந்தார் இவ்வாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாத்தி படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.