விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பல பிரச்சனைகள் வந்தாலும் கூட நான்கு அண்ணன் தம்பிகளும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மீனாவின் அப்பா ஜகார்த்தனனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு, கடை, ஹோட்டல் என அனைத்தும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டது எனவே இது அனைத்திலும் இருந்து சமாளித்து தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
முல்லை குழந்தை பெற வாய்ப்பு இல்லை என டாக்டர் கூறிய நிலையில் முல்லை கதிர் ஜோடிகள் சோகத்தில் இருந்து வந்தனர் இப்படிப்பட்ட நிலையில் திடீரென முல்லை கர்ப்பமானது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இதே நேரத்தில் கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் வேலை செய்யக்கூடாது என்பதால் மீனா தனத்திற்கு உதவி செய்து வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகிறார்.
இதனை அடுத்து புதிதாக இவர்கள் கார் வாங்கி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து மிகவும் இவர்கள் சந்தோஷமாக இருக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகி வேறு ஒரு சீரியலில் பிரபலம் நடிகை அறிமுகமாகி இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
ஆம், முல்லையின் அக்காவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தான் தற்பொழுது காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யாவின் அம்மாவாக நடிக்க இருக்கிறார். அதாவது காற்றுக்கென்ன வேலை சீரியலில் சூர்யாவின் அம்மாவாக நடித்து வந்த நடிகை விலகிய காரணத்தினால் அவருக்கு பதில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மல்லிகா அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.