விஜய் மாதிரி அஜித் இல்லை என உண்மையை உடைத்த பிரபலம்.! கடுப்பில் விஜய் ரசிகர்கள்..

vijay-ajith
vijay-ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகரகள் தான் அஜித் மற்றும் விஜய் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுஸ் இருந்து வருகிறது மேலும் இவர்களில் இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். அந்த வகையில் இவர்களுடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் வெளியாக இருக்கிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் பெரியாயாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறது. ஆனால் ஒரு புறம் வாரிசு திரைப்படத்திற்கு திரையரங்குகள் பெரிதாக கிடைக்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களையும் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது மேலும் உதயநிதி சமீப பேட்டி ஒன்றில் இரண்டு திரைப்படங்களுக்கும் தலா 50 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக கூறியுள்ளார். ஆனால் விஜயின் வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜ் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

அது எப்படி இரண்டு நடிகர்களுக்கும் ஒரே அளவு இட ஒதுக்கீடு தருவது எனவே இது குறித்து விரைவில் உதயநிதியை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறியுள்ளார் இது அஜித் ரசிகர்களுக்கு பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் இவர்களைப் பற்றிய  ஏராளமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் வலைபேச்சி சேனல் அஜித்தை போல விஜய் இல்லை என கூறியுள்ள தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் எப்பொழுதும் ஷூட்டிங் என்பது எத்தனை கோடி கொடுத்தாலும் மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பில் இருக்க மாட்டாராம் ஆனால் அஜித் அப்படி கிடையாதாம் காலை 9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்தால் இரவு 12 மணி வரை கூட அஜித் இருந்து நடித்து கொடுத்துவிட்டு தான் செல்வாராம் என இவர்கள் கூறியுள்ள தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.