Leo Audio Launch cancel: விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் லியோ. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை குஷிப்படுத்த லியோ டீம் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வந்த நிலையில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடத்தப் போவதாக தகவல்கள் எல்லாம் தெரிவித்தன.
இதனால் ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் திடீரென இன்று ஆடியோ லான்ச் ரத்து என அதிகாரப்பூர்வமாக சொல்லியது. இதனால் அதைப் பற்றிய பேச்சுக்கள் அதிகம் வருகின்றன இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் பேட்டி ஒன்றில் லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது..
இந்த அறிவிப்பு எனக்கு வேற மாதிரியான அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து என்று தான் படக்குழு வெளியிட்டு இருக்க வேண்டும் ஆனால் ஆடியோ லாஞ்ச் நடத்தவில்லை என்று தான் அறிவிப்பை ஏன் வெளியிட்டது என்று தெரியவில்லை.. நேற்று இரவு 2 மணி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ இசை வெளியீட்டுக்காக மேடை அமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது.
மேலும் சொல்லப்போனால் தயாரிப்பாளர் லலித், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர்கள் அந்த இடத்தில் சந்தித்து விஐபி வரும் வழி, பார்வையாளர்கள் வரும் வழி, பார்க்கிங் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததற்கு அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.
நிறைய கூட்டம் வரும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது விஜய்க்கு கெட்ட பெயராகிவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள் இந்த காரணத்தை ஏற்க முடியவில்லை.. திடீரென நிகழ்ச்சி இரத்தானதற்கு பின்னால் நிச்சயமாக அரசியல் அழுத்தம் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.. உதயநிதியோ அல்லது ரெட் ஜெயண்ட் நிறுவனமோ இந்த படத்திற்கு எதிரான வேலைகளில் இறங்க மாட்டார்கள்.
ஆனால் இந்தப் படத்திற்கு அழுத்தம் இருந்தால் அது திமுக அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமாக இருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு என்ன காரணம் என்றால் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த இசை வெளியீட்டு விழாவை அரசியல் மாநாட்டு விழாவாக பயன்படுத்தப்போகிறார் என்ற தகவல் வந்ததால் இது நடந்திருக்கலாம் என்று பிஸ்மி கூறி இருக்கிறார்.