பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றுவதற்காக பல கோடி சம்பளம் கேட்கும் பிரபலம்.! அதிர்ச்சியில் திரையுலகம்..

bigg-boss
bigg-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையிலும்  சோசியல் மீடியாவின் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது மேலும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பணியாற்றி வந்த கமலஹாசன் பாதியிலேயே வெளியேறிய சூழ்நிலையில் இவருக்கு பதிலாக சிம்பு பணியாற்றி வந்தார்.

எனவே பிக்பாஸ் சீசன் 6 யார் தொகுத்து வழங்குவார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிக்பாஸ் ஹிந்தியில் 15 சீசன்கள் முடிந்த நிலையில் மிக விரைவில்  16வது சீசன் தொடங்க இருக்கிறது. என்னில ஏன் இந்த 15 சீசன்களுமே பாலிவுட் நடிகர் சல்மான்கான் தான் தொகுத்து வழங்கினார் அதேபோல் இவர் பல முறை நிகழ்ச்சியை விட்டு வெளியேற நினைத்துள்ளார்.

ஆனால் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் சல்மான்கானை வற்புறுத்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைத்து வருகிறார்கள். எனவே கடந்த 15 சீசன்களை தொகுத்து வழங்கியவர். கடந்த சீசனை தொகுத்து வழங்குவதற்காக 350 கோடி சம்பளமாக பெற்றிருந்தார்.  ஆனால் தற்பொழுது 16வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக  1050 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது

ஏனென்றால் இதில் 50 கோடி வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்பதால் முன்னதாகவே 1050 கோடி கேட்டுள்ளார். இதனைக் கேட்டு திரை உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏனென்றால் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார்.  இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால் பல பட வாய்ப்புகளை இழந்தும் வருகிறார் இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இதன் காரணமாகவே இவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறார்.