வாய்ப்பிற்காக அதை செய்ய சொன்ன பிரபலம்.! முடியாது என்று மறுத்த நடிகை…

actress
actress

மலையாள சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் மலையாளத்தில் நடித்த பிரபலமான இவர் தமிழில் நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி நாயர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கிராமத்து பெண்ணாக நடித்து பிரபலமானார்.

மேலும் வாரிசு நடிகராக சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படமான டானாகாரன் என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

காவல்துறை அதிகாரிகள் செய்யும் செயல்களையும் புதிதாக காவல் துறையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளை எப்படி நடத்துகிறார்கள் அது மட்டும் அல்லாமல் பயிற்சி எப்படி சொல்லி தருகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி நாயர் கிராமத்து கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இவரை பார்க்கையில் பக்கத்து வீட்டு பெண் போல் அனைவருக்கும் தோன்றுகிறது. இந்த நிலையில் கிராமத்து கதைகளாக தேர்ந்தெடுத்தவரும் நடிகை அஞ்சலி நாயர் தெலுங்கில் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இந்த தெலுங்கு படத்தின் வாய்ப்புக்காக சென்றபோது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சொன்ன ஒரு சொல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது அஞ்சலி நாயரிடம் உங்களுடைய இந்த பெயரை மாற்றினால் இந்த படத்தில் நடிக்கலாம் என்று கூறி இருக்கிறார்.

அதற்கு உடனே அஞ்சலி நாயர் இந்த பெயர் என்னுடைய பெற்றோர்கள் வைத்த பெயர் இதனால் என்னால் மாற்ற முடியாது வேண்டுமானால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டு அந்தப் படத்தை உதறி தள்ளிவிட்டு திரும்பியிருக்கிறார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.