ஒரு இயக்குனர் ஒரு டாப் ஹீரோவை நல்ல படம் கொடுத்து விட்டால் போதும் அந்த இயக்குனரை தேடி மற்ற நடிகர்கள் படையெடுப்பார்கள் இது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தளபதி விஜயை ஆரம்ப காலகட்டத்தில் அம்மா சென்டிமென்ட் அக்கா, தங்கையை சென்டிமென்ட் உள்ள படங்களை நிறைய தேர்வு செய்து நடித்தார்.
அப்படி ஒரு தடவை இயக்குனர் பேரரசுடன் விஜய் கைகோர்த்து அம்மா, தங்கை என இரண்டு சென்டிமென்ட் கலந்த படங்களில் நடித்தார் இந்த படம் வேறு எதுவும் இல்லை திருப்பாச்சி மற்றும் சிவகாசி தான் படங்கள் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட். இந்த படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் இயக்குனர் பேரரசும் பிரபலமடைந்தார்.
அவரை போலவே தளபதி விஜய் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றது அதன் பிறகு விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தளபதி விஜய் ஏகப்பட்ட பஞ்ச் டயலாக் பேசி இருப்பார் அதில் ஒன்று ஆப்பு கண்ணுக்கு தெரியாது போன்ற வசனம் அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலானது..
இப்படி நல்ல படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த பேரரசு ஒரு கட்டத்தில் அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுக்க முயற்சித்தார் முதலில் அஜித்தை சந்தித்து திருப்பாச்சி படத்தின் கதையை கூற ஆர்வம் காட்டினார் ஆனால் அஜித் கதையை கேட்கவில்லை கடைசியாக ஒரு தடவை சந்திக்கும் பொழுது படத்தின் கதையை கேட்டார்.
கேட்டுவிட்டு அவர் சொன்னது “ஆப்பு கண்ணுக்கு தெரியாது” விஜய் சொன்ன மாதிரியே நம்ம படத்துலயும் வச்சிருங்க என சொல்லி உள்ளாராம்.. இந்த படம் அப்பொழுது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் வெளிவந்து சுமாரான வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.