90களில் பிரபல முன்னணி காமெடி நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. இவர் 2003ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் வெளியான பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராம், சிவகாசி, சண்ட கோழி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்தார்.
இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் பிதாமகன், ராம், அறை என் 305 கடவுள், சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் 2010ஆம் ஆண்டில் சங்கீதா என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது ஒரு பேட்டியில் கஞ்சா கருப்பின் மனைவி கஞ்சா கருப்பை பற்றி சில செய்திகள் தெரிவித்துள்ளார் அதில் இவர் டாக்டரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று லட்சத்துடன் இருந்தாராம் ஏனென்றால் இதற்கு காரணம் அவருடைய அப்பா சரியான மருத்துவம் இல்லாத காரணத்தினால் தான் இறந்து விட்டாராம் எனவே மருத்துவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணினாராம். அதுமட்டுமல்லாமல் கஞ்சா கருப்பு ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த இருப்பதால் கல்வியறிவில்லாத காரணத்தினால் இவர் ஊரில் அனைவரும் படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டினாராம்.
இந்த நிலையில் இவர்களுடைய வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் திடீரென படம் நடிக்க தெரியாத ஒருத்தரைவைத்து படம் தயாரித்ததால் நஷ்டத்தில் கஞ்சா கருப்பு தள்ளப்பட்டார். எனவே சற்று காலம் இப்படியே போய்க்கொண்டிருந்த வாழ்க்கை தற்போதுதான் இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறாராம்.
இந்த செய்தியை அறிந்த இவர்களுடைய ரசிகர்கள் இனிமேலாவது யாரிடமும் ஏமாறாமல் இருங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.