வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மைகளைக் கொண்டு விலங்குபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்பொழுது பத்து தல திரைப்படம் உருவாகி வரும் நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி அன்று பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாக பட குழுவினர்கள் சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சிம்பு பல சிக்கல்களில் மாட்டிக் கொண்ட நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்தவானம், சுசீந்திரம் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மீண்டும் தன்னுடைய வெற்றி திரைப்படங்களை தர ஆரம்பித்தார். ஆனால் இந்த படத்தில் ரசிகர்கள் பழைய சிம்பு மிஸ் ஆவதாக தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கௌதம் வாசுதேவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் சிம்புவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பத்து தல திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தினை இயக்கிய கிருஷ்ணா இயக்கி வருகிறார். மேலும் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
இதனை அடுத்து முக்கியமாக இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்து தல படம் குறித்த அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 3ம் தேதி மிகப் பெரிய சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. எனவே டீசர் அல்லது ட்ரெய்லர் ஏதாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.