பாக்கியலட்சுமி தனக்கு கல்யாணம் ஆர்டர் கொடுக்கும் ராஜசேகரை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்து அதை ஜெனியிடம் தனக்கு ஏழு ஆர்டர் கிடைத்திருப்பதாக கூறுகிறார். அதனால் ஜெனி சந்தோஷம் அடைகிறாள். உடனே அமிர்தா நான் உங்களுக்கு இந்த கல்யாண ஆர்டர் செஞ்சு முடிக்க உதவி செய்கிறேன் என கூறுகிறார் உடனே ஜெனியும் நானும் வருகிறேன் எனக் கூற அதற்கு செல்வி அமிர்தா நல்லா சமைப்பால் எனக் கூற உடனே ஜெனியை பார்த்து செல்வி கிண்டல் செய்கிறார்.
அதற்கு பாக்கியா ஏற்கனவே எடுத்த கல்யாண ஆர்டரில் ஜெனி நமக்கு உதவி செய்திருக்கா அதனை மறந்துட்டியா எனக் கூற ஆனால் இப்பொழுது நீ ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாய் அதனால் வீட்டிலேயே இரு என பாக்யா ஜெனியிடம் கூறுகிறார். நீ இங்கே இருந்து கொண்டு எனக்கு ஹெல்ப் பண்ணு நீ தான் என்னுடைய மேனேஜர் ஆர்டர் கேக்குறது பொருளை வர வைப்பது என அனைத்தையும் நீ பார்த்துக்கொள் என பாக்கியா கூறுகிறார் உடனே ஜெனி எனக்கு வேலை இருந்தா ஓகே தான் எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் நிலா பாப்பாவை நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறுகிறார்.
உடனே அமர்ந்தான் இல்ல பரவாயில்ல நானே அழைத்து கொண்டு போறேன் எனக்கு கூறுகிறார். ஜெனி நானே பார்த்துக்கொள்கிறேன் எனக்கு இங்கு போர் அடிக்கும் என கூறி முடிக்கிறார். உடனே இனியா டியூஷனில் இருக்கும் பொழுது திடீரென சரண் என்ற பையன் கையில் மலருடன் வந்து சேர்கிறார் அப்பொழுது அந்த மலரை டியூஷன் வாத்தியாரிடம் கொடுக்கிறார். உடனே இனியாவின் தோழி அவன் ஸ்மார்டாக இருக்கிறான் என இனியாவிடம் கூற அவளும் ஆமாம் என்கிறார்..
சரண் இனியா பக்கத்தில் அமருகிறார் அதன் பின்னர் டியூஷன் முடிந்ததும் இனியாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் சரண். பின்பு அடுத்த காட்சியில் பாக்யா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜெனியும் அங்கு வருகிறார் அவள் வந்ததும் நான் போய் அமிர்தாவையும் எழிலையும் கூட்டிகிட்டு வருகிறேன் எனக் கூற உடனே ஈஸ்வரி அவங்க வந்தா நான் இங்க சாப்பிட மாட்டேன் என கோபத்துடன் கூறுகிறார்.
உடனே பாக்யா பதறிப் போய் நீங்கள் உட்கார்ந்து சாப்பிடுங்கள் அத்தை அவங்க வர மாட்டாங்க என கூறுகிறார் ராமமூர்த்தியும் எல்லோரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகிவிட்டது என பீல் பண்ணி பேசுகிறார் அப்பொழுது செழியன் எழிலை குறை சொல்ல ஆரம்பிக்கிறார் உடனே பாக்கியா கோபப்படுகிறாள். அனைவரும் சாப்பிட்டு எழுந்த பிறகு அமிதாவையும் எழிலையும் சாப்பிட கூப்பிடுகிறார். அவர்கள் வந்ததும் எல்லோரும் சாப்பிடும் பொழுது நான் கூப்பிடவில்லை என்று தப்பா நினைக்காதீங்க எனக் கூறுகிறாள் பாக்யா உடனே அதெல்லாம் இல்ல நீங்க இப்ப எங்க கூட தானே சாப்பிட போகிறீர்கள் என்கிறாள்.
அதேபோல் அந்த பக்கம் இனியா புதிதாக டியூஷன் சேர்ந்துள்ள சரண் என்பவரிடம் சாட் செய்து கொண்டிருக்கிறாள் அதேபோல் இனியா தன்னுடைய புத்தகத்தின் நடுவில் செல்போனை வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் சாட் செய்து கொண்டிருக்கிறார் இதனை கவனித்த ராதிகா படிக்க ஒன்னும் இல்லை நானும் ரொம்ப நேரமா பாத்துகிட்டே இருக்கேன் யார் கூடயோ பேசிட்டு இருக்கியே என கோபப்படுகிறாள்.
உடனே இனிய இதெல்லாம் நீங்க ஏன் கேக்குறீங்க என ஆவேசம் அடைய கோபி அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. இனியா காதலில் விழப் போகிறாரா இது வீட்டிற்கு தெரிந்தால் இனியாவின் நிலைமை என்ன என்பது அடுத்த எபிசோடில் தெரியவரும்.