தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் கமல் இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தை கொடுத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் பல சாதனைகளை படைத்தது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் மகள்தான் நடிகைக்கு சுருதிஹாசன்.
இவர் 3 மற்றும் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் தனது முழு நேர கவனத்தை செலுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் சமீப காலங்களாக தனது தந்தை கமல்ஹாசனை விட்டு தனது காதலனுடன் லிவிங் டூ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களில் தற்போது நடித்துள்ளார் இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு மன ரீதியாக பல பிரச்சினைகள் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம் .
அதுமட்டுமல்லாமல் தனக்கு அதிகமான மன உளைச்சல் ஏற்பட்டால் நான் தெரபி சிகிச்சை செய்து கொள்வேன் என்று ஓபனாகவே பேசி உள்ளாராம். இவர் இப்படி பேசியதினால் தான் சிரஞ்சீவி ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வந்தனர். எதற்காக என்றால் நடிகை சுருதிஹாசன் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு தான் சிரஞ்சீவி ரசிகர்கள் நடிகை ஸ்ருதி ஹாசனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஆனால் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரசிமா ரெட்டி படத்திற்காக நடிகை ஸ்ருதி ஹாசன் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் நெட்டிசன்கள் 62 வயது நடிகரின் படத்திற்கு பிரமோஷன் செய்யப் போவீர்கள் ஆனால் சிரஞ்சீவி படத்திற்கு பிரமோஷன் செய்ய மாட்டீர்கலா என்ற விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.