A 5 year old boy who took 200 rupees to buy a Lamborghini car: பொதுவாகவே உலகில் பெண்களுக்குகெப்படி ஆடை, அணிகலன்கள் மீது மோகம் உள்ளதோ. அதுபோலவே, ஆண்களுக்கு கார், பைக் என்றால் மோகம் அதிகம். அந்த வகையில் 5வயது சிறுவன் ஒருவன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கார் வாங்க 200 ரூபாய் எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றது ஆச்சரியம் அளித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு லம்போர்கினி கார் வாங்குவது என்பது பெரும் கனவாக உள்ளது. இந்த காருக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இந்த காரின் விலை அதிகம் என்பதால் பலருக்கு இது வெறும் கனவாகவே போய்விடுகிறது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 5 வயது சிறுவன் கார் ஓட்டுவதே பெரிய ஆச்சரியம்தான். அவன் பெற்றோர்களிடம் ரொம்ப நாட்களாக லம்போர்கினி கார் வாங்கி தரும்படி அடம்பிடித்து உள்ளான் அதற்கு அவர்கள் மருத்துள்ளர்கள். இதனைதொடர்ந்து மீண்டும் தாயிடம் கார் வாங்கி தரும்படி அடம்பிடித்து உள்ளான்.
மேலும் இந்த சூழலில் தனது அம்மாவின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு 3 அமெரிக்க டாலர்களை வைத்துக்கொண்டு கார் வாங்குவதற்காக காரில் வேகமாக சென்றுள்ளான். மூன்று டாலர் என்றால் நமது இந்திய மதிப்பில் தோராயமாக 200 ரூபாய். இந்த பணத்தை கையில் வைத்துக்கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கார் வாங்க அந்த சிறுவன் புறப்பட்டு உள்ளான்.
அவர்கள் மறுக்கவே சிறுவன் காரை எடுத்துக்கண்டு உட்டாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு சென்று காரை வாங்க வேண்டுமென திட்டமிட்டு புறப்பட்டுள்ளான். அவன் போகும் போது வழியில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் அவனை மடக்கி பிடித்து விட்டனர். போலீசார் அவனை விசாரித்தபோது அவன் கூறிய காரணம் கேட்டு வியந்து போய்விட்டனர்.
தற்போது இந்த செய்தி உலகம் முழுதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அந்த சிறுவனை தண்டிக்கவேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். கார் மீது கொண்ட மோகத்தினால் இப்படி செய்து விட்டான் என்பதற்காக ஜெர்மி நெவ்ஸ் என்ற கார் ஆர்வலர் காரில் ரைட் அழைத்து சென்றுள்ளார். அவனது ட்ரீம் காரில் சென்று வரும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.