சினிமா நடிகைகள் சமீப காலமாக தங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்களைப் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள் அந்த வகையில் பல நடிகைகள் மீ டூ என்ற ஹாஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் தங்களுக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து பதிவிட்டு வந்தார்கள் இதனால் சினிமா உலகில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.
அப்படிதான் 24 வயது நடிகையை பிட்னஸ் ட்ரைனர் தவறாக பயன்படுத்திக் கொண்டதை பிரபல நடிகை போலீசில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஆதித்யா அஜய் கபூர் என்ற பிட்னஸ் ட்ரெயினர் அவர்களிடம் சென்றுள்ளார் நாளடைவில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது பிறகு காதலாக மாறியது.
ஆரம்ப காலகட்டத்தில் இனிமையான இருந்த உறவு போகப் போக கசக்க ஆரம்பித்தது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த 24 வயது இளம் நடிகையுடன் ஆதித்யா அஜய் பலமுறை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் போகப் போக ஆதித்யா அஜய் பல கொடுமைகளை கொடுத்துள்ளார் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத இளம் நடிகை போலீசில் பரபரப்பாக புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நண்பர் ஒருவர் வீட்டில் இருவரும் சந்தித்துள்ளார்கள் அதன் பிறகு செல்போனில் மொபைல் நம்பரை பகிர்ந்து கொண்டார்கள் பின்பு இருவரும் காதல் வலையில் விழுந்தார்கள். இளம் நடிகையை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆசை வார்த்தையை கூறியுள்ளார் அதை நம்பி அந்த நடிகையின் தன்னையே அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
மும்பையில் ஃபிட்னஸ் ட்ரைனர் வீட்டிற்கு எல்லா நடிகையும் சென்று வர ஆரம்பித்ததில் இளம் நடிகைக்கு அதிகமாக டார்ச்சர் கொடுக்கப்பட்டது தெரியவந்தது பின்னர் அந்த ட்ரெயினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒதுங்கி இருந்த நிலையிலும் இளம் நடிகையை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் சொல்லும் படி கேட்க வேண்டும்.
தன்னை விட்டு நீங்க செல்ல நினைத்தால் உன்னையும் உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் என்ன செய்வேன் என்று தெரியாது அதுமட்டுமில்லாமல் உன்னுடைய புகைப்படங்களையும் வெளியிடுவேன் என ஆதித்யா மிரட்டல் எடுத்ததாக அந்த புகாரில் இளம் நடிகை கூறியுள்ளார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட மும்பை போலீஸ் ஆதித்யா அஜய் கபூரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.