சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் ராசி இல்லாத நடிகை என முத்திரை பதித்த ஒரு நடிகை சரியான பட வாய்ப்பு இல்லை என்றாலும் வரக்கூடிய பட வாய்ப்பை விட்டு விடாமல் நடித்து வந்த அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல கிடைத்த வாய்ப்பு தான் பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் வலுவான ஒரு கதாபாத்திரம். இந்த படத்தில் நடித்து பிரபலமானார்.
ஆனால் அந்தப் படத்தில் நடிப்பதற்காக அந்த இயக்குனர் தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கிறார். சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று அந்த நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு வெவ்வேறு படத்தில் நடிக்க சென்ற அந்த நடிகையின் மோகத்தில் விழுந்து கிடந்த அந்த இயக்குனர் அந்த நடிகை எங்கு சென்றாலும் விடாமல் லவ் டார்ச்சர் செய்து வருகிறாராம்.
மேலும் அந்த இயக்குனருடன் நடித்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல் பேரும் புகழும் வாங்கித் தந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்து அந்த நடிகை அந்த இயக்குனரின் லவ் டார்ச்சருக்கு ஆளானார். ஆனால் அந்த நடிகை எனக்கு இதெல்லாம் செட் ஆகாது என்று கூறிவிட்டார்.
அந்த நடிகை அந்த இயக்குனருக்கு நோ சொன்னதற்கு முக்கிய காரணமே அந்த நடிகைக்கு 20 வயது அந்த இயக்குனருக்கு 40 வயது ஆவது தான். இதன் காரணமாக தான் அவரை கழட்டி விட்டார் அந்த நடிகை.
அதன் பிறகு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடித்து வந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் தன்னுடன் நடித்த நடிகரின் மீது காதல் ஆசை வந்தது. ஆனால் அந்த காதலும் திடீரென பிரேக் அப் ஆனது. அதன் பிறகு மன உளைச்சலில் இருந்த அந்த நடிகை ஒரு தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்த அந்த நடிகை தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.