தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை மீனா இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த பொது இளசுகளின் கனவு கன்னியாகவும் திகழ்ந்து வந்தார்.
90களில் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு நவயுகம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது பன்னிரண்டாவது வயதிலேயே நடிகை மீனா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றிபெறாததால் அடுத்ததாக இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார் நடிகை மீனா.
இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை மீனாவிற்கு வெறும் 13 வயது தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் மீனா அவர்கள் பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது 13 வயதாகும் பொது என் ராசாவின் மனசிலே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் யார் என்ரே எனக்கு தெரியாது அதுமட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அழைக்கும் போது போல்டாக ஒப்புக்கொண்டேன்.
ஆனால் சுற்றி இருக்கும் நண்பர்கள் அந்த ரோலில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்காமல் நான் அதில் நடித்தேன் என்று கூறியுள்ளார் நடிகை மீனா. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் போது என்னுடைய வயது 13 இருக்கும் அந்த சமயத்தில் ராஜ்கிரனுக்கு கிட்டத்தட்ட 40 வயதாகி இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்தேன் என்று கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் ராஜ் கிரணின் மனைவியாக நடித்து இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் நடிகை மீனாவின் சினிமா வாழ்க்கையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்த்தது.