நடிகர் விஜய் தனது 49வது பிறந்த நாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடிய நிலையில் அவர் தனது குடும்பத்தினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்த அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இவர்களுடைய கூட்டணியில் இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றினை பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் விஜய் அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்தார் விஜய். அதோடு மட்டுமல்லாமல் விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம், அன்று பிறந்த பச்சலம் குழந்தைகளுக்கு மோதிரம், அன்னதானம், விஜயின் அறிவுரைப்படி காமராஜர் போன்ற தலைவர்களின் புத்தகங்கள் என பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக தனது 68வது திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில் இது முடிந்தவுடன் அரசியலில் ஈடுபட இருக்கிறார் எனவும் இதுதான் இவருடைய கடைசி படம் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது விரைவில் இது குறித்து விஜய் தெளிவான விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் ஷோபா தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயின் பிறந்த நாளை தனது அம்மா,அப்பா, மனைவி மாற்றும் தனது பிள்ளைகள் ஆகியோர்களுடன் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எனவே இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகள் குவிந்து வருகிறது.
Family Birthday party 🎉 🥳 @actorvijay ❤ pic.twitter.com/JGPcHFrIcb
— Shoba Chandrasekhar (@ShobaOfficial) June 23, 2023