தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பற்றி வருகிறது மேலும் தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் முழு கேரக்டராகவே நடித்து கலக்கி வருபவர் தான் சியான் விக்ரம்.
இவர் தற்பொழுது ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி அவர்கள் நடித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது. கோபுரா திரைப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படம் நேரம் 3 மணி மூன்று நிமிடங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்பட மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இந்த படத்தைக் குறித்து கடிதம் எழுதி உள்ள மாணவன் குறித்த தகவல் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அதாவது நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தினை பார்ப்பதற்கு லீவு கேட்டு கல்லூரி மாணவன் எழுதிய கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அந்த மாணவன் இந்த படத்தினை காண முதல் நாள் டிக்கெட் கிடைத்துள்ளதால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி செல்ல உள்ளோம் எங்களை அழைக்க முயற்சிக்காதீர்கள் நாங்கள் கண்டிப்பாக கல்லூரிக்கு வரமாட்டோம் என்று எழுதியுள்ளனர்.மேலும் அதில் எங்களிடம் எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒன்று உள்ளது விரும்பினால் நீங்களும் வரலாம் எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்கள் இந்த மாணவனின் கடிதம் வெளியாகி தற்பொழுது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்டாகி வருகிறது.