96 த்ரிஷா போல் மாறிய பிரியங்கா.! புகைப்படத்தை பார்த்து பிரமிக்கும் ரசிகர்கள்..

priyanga-1
priyanga-1

நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ. அதேபோல் தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஓரிடம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியர்,ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி உள்ளிட்ட இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா.

இவர் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆனால் பெரிதாக  பிரபலத்தை தராத காரணத்தினால் தொகுப்பாளராகவே தற்போது வரையிலும் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் தற்போது தென்னிந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மகாபாவும் பிரியங்காவும் இணைந்து கலாய்த்து வருவதால்  மிகவும் காமெடியாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்கிறார்கள். எனவே தற்பொழுது பெரும்பாலும் இவர்கள் இருவரின் ஜோடியும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5 கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் ரன்னராக வெற்றிபெற்றார்.  இவ்வாறு பிரியங்கா ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, ஸ்டார் மியூசிக் மற்றும் ஸ்டார் விஜய் என இந்தியர்  நெட்வொர்க் தொலைக்காட்சிகள் அனைத்திலும் பணியாற்றியுள்ளார்.

இவரை பெரும்பாலும் தொலைக்காட்சிகளின் சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகிறார்கள்.அந்த வகையில் கலாட்டா நச்சத்திரா டிவி திரைப்பட விருதுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை சிறந்த பெண் தொகுப்பாளினி என விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.  இந்நிலையில் அடிக்கடி சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்பொழுது 96 திரைப்பட த்ரிஷா போல் இருக்கும் சுடிதாரை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டிரஸ் ஓகே உடம்பை எப்படி குறைப்பது என கலாய்த்து வருகிறார்கள்.

priyanga
priyanga