2018 ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 96 இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்களை பள்ளி நினைவிற்குக் கொண்டு சென்றது.
அந்த அளவு காதல் கலந்த திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். இவர் சமீபத்தில் 96 திரைப்படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது 96 திரைப்படத்தில் அவர்களின் தங்கையாக நான் நடித்திருந்தேன் ஆனால் அந்த திரைப்படத்தில் நான் நடித்த நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். ஆனால் அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள் இந்த சமயத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் நல்ல அனுபவத்தைக் கொடுத்தது எனவும் கூறியிருந்தார்.
மேலும் கருப்பாக இருந்தால் பட வாய்ப்பு கிடைக்காது என பலரும் கூறிவரும் நிலையில் அதை உடைத்தெறிந்து சரண்யா ரவிச்சந்திரன் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். நடிப்புக்கு நிறம் தேவை இல்லை நடிப்பு மட்டுமே போதும் என நிரூபித்தவர்.
இவர் பல குறும்படங்களில் நடித்துள்ளார் காதலும் கடந்து போகும், வடசென்னை இறைவி என பல திரைப்படங்களில் சிறு சிறு வேடத்திலும் நடித்துள்ளார் பாலா இயக்கத்தில் உருவாகிய வர்மா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பை பார்த்து பாலா பாராட்டியதாக கூறியுள்ளார். இதை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.