நடிகை திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இத்திரைப்படம் உன்னத பூர்வமான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில் திரிஷாவின் சின்ன வயது ஹீரோயினாக அறிமுகமானவர் கௌரி கிஷன். இவர் இத்திரைப்படத்தில் ஜானு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதனால் அனைவராலும் குட்டி ஜானு என்று போற்றப்பட்டார்.
இவரின் முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இவர் மலையாளத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இதனை தொடர்ந்து தமிழிலும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வந்தாலும் கௌரி கிஷன் குட்டையான உடையில் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அவ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.